மிட்டாய் கவிதைகள்!

பெண் - ஒரு தலைக் காதல்!

August 11, 2012

beautiful girl painting41

இடை இடையே
சொருகியிருந்த புத்தகங்கள்,
அவன் கடைக் கண்கள்
என் கண்ணைக் கண்டபோது,
இருபுறமும் சிதறி விழ,
எடுத்துத் தர
என்னருகே வந்தான்!

ஒருகரம் முகம் மறைக்க
மறு கரம் வெட்கி
வெறுந் தரையில் கோலமிட,
பதட்டம் கொஞ்சம் இருந்தாலும்,
விழி கூடத் துடிக்கிறது,
அவனுடன் கொஞ்சம் பேச!

முதல் பார்வையில்
வந்த காதலால்,
அவனைக் கண்ட போதெல்லாம்
தவறாமல் தவறி கீழே
விழ நினைக்கின்றது
எந்தன் புத்தகங்கள்!

காதல் செய்யத் தெரிந்த எனக்கு
அதை அவனிடம் சொல்லத் தெரியவில்லை!
அவனைப் பார்த்தால் சொல்லுங்கள்,
அங்கே ஒருத்தி
கீழே விழுந்து கிழிந்த பொக்கிஷங்களை
கண்ணீர்த் துளிகளால்
துடைத்துக் கொண்டிருக்கிறாள் என்று!

சொல்லாக் காதலை அன்று
புரிந்துகொள்ளத்தான் இல்லை!
இன்று தெரிந்தாவது கொள்ளட்டும்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்